search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊராட்சி மன்ற தலைவர்"

    • சரவணன் மற்றும் அவரது மனைவி தங்களது குழந்தைகளை பார்த்துவிட்டு இன்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தனர்.
    • காரின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த பாலூரை சேர்ந்தவர் சரவணன். (வயது 48). அ.தி.மு.க.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி சுதா பாலூர் சன்னியாசி பேட்டை ஊராட்சி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சரவணன் குழந்தைகள் நெய்வேலியில் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இதன் காரணமாக சரவணன் மற்றும் அவரது மனைவி தங்களது குழந்தைகளை பார்த்துவிட்டு இன்று காலை மீண்டும் வீட்டுக்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் முன்பக்க இரும்பு கதவு மூடி இருந்த நிலையில் மரக்கதவு உடைந்து திறந்து இருந்தது. இதனைத் தொடர்ந்து சரவணன் மற்றும் அவரது மனைவி உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் முழுவதும் சிதறி கிடந்தது. பின்னர் அறைக்குள் சென்று பார்த்தபோது பீரோ கதவு உடைந்து இருந்தது.

    மேலும் பீரோவில் இருந்த 3 1/4 தங்க நகை மற்றும் ஒரு லட்சம் ரொக்க பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் 2.50 லட்சம் ஆகும். மேலும் காரின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். இத்தகவல் அறிந்த நடுவீரப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் தடவியில் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றனர். இது குறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லிக்குப்பம் அருகே அ.தி.மு.க.முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டில் நகை, பணம் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேலூர் அருகே முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் விபத்தில் பலியானார்.
    • அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள அ.வளையப்பட்டியை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது51). அ.தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர்.

    இன்று காலை கீரைக் கட்டுகளை விற்பதற்காக தனது இருசக்கர வாகனத்தில் மாட்டுத்தாவணி மா்ாக்கெட்டிற்கு சென்றார். பின்பு அங்கிருந்து வீட்டிற்கு திரும்பினார். அழகர் கோவில் அருகே உள்ள அப்பன் திருப்பதி பகுதியில் வந்து கொண்டிருந்த அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் ரோட்டோரம் இருந்த ஓடைக்குள் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அந்த வழியாக சென்றவர்கள் வெகு நேரத்திற்கு பின்னே தர்மராஜ் இறந்து கிடப்பதை பார்த்தனர்.

    இதுகுறித்து அப்பன் திருப்பதி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்மராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிந்து தர்மராஜ் மீது மோதிய வாகனம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக துப்புரவு பணியாளர் மீது புகார் வந்துள்ளது.
    • ஆத்திரமடைந்த துப்புரவு பணியாளர் தான் வைத்திருந்த மதுபாட்டிலால் ஊராட்சி மன்ற தலைவர் தலையில் அடித்தார்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஜல்லிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சாமிநாதன். இவர் தினைகுளம் விநாயகர் கோவில் முன்பு ஊராட்சி மன்ற உறுப்பினர் முருகனுடன் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஊராட்சி மன்ற துப்புரவு பணியாளர் சங்கிலி வந்தார். அவரிடம் சாமிநாதன், போதையில் பொதுமக்களிடம் தகராறு செய்வதாக உன் மீது புகார் வந்துள்ளது. இனி அது போல் செயல்படக்கூடாது என்று எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சங்கிலி தான் வைத்திருந்த மதுபாட்டிலால் சாமிநாதனின் தலையில் அடித்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சங்கிலி மதுபாட்டிலால் சாமிநாதனை குத்தி கொலை செய்ய முயன்றதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் தளி போலீசார் விசாரணை நடத்தி சங்கிலியை கைது செய்தனர்.  

    • ரங்கப்பனூரில் தூய்மை இயக்க விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • ஊராட்சி சமூக ஆர்வலர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் ஊராட்சியில் தூய்மை இயக்கம் மற்றும் நீர் மேலாண்மை இயக்கம் சார்பாக விழிப்புணர்வு பேரணி ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனாகாமராஜ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் துணை தலைவர் ராதிகா பாஸ்கரன், ஊராட்சி செயலர் திருமால்வளவன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி சமூக ஆர்வலர்கள் மகளிர் குழு உறுப்பினர்கள் ஊராட்சி பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    ×